முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வூப் ஹக்கீம்

சாய்ந்தமருது மக்களுக்கு 2015-07-31ஆம் திகதி
வழங்கிய திடவாக்கு

சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையான உள்ளுராட்சிசபைக் கோரிக்கையை தேர்தலைத் தொடர்ந்து பிரகடனப்படுத்துவதற்கான எல்லா விதமான நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்க்கொண்டுள்ளோம். குறுகிய கால எல்லைக்குள் எங்களது கைக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நியாயமானது. அவற்றை பெற்றுக்கொடுப்பது எங்களது கடமை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான வூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் 2015-07-31 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது அமைப்பாளரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான எம்..எம்.பிர்தௌஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர் றவூப் ஹக்கீம், மேலும் தெரிவித்ததாவது,
புதிய கல்முனை அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாகவும் சாய்ந்தமருது உள்ளிட்ட கல்முனைத் தொகுதியை வளர்ச்சியடைந்த நகரங்களின் நிலைக்கு உயர்த்துவதற்கான சகலவித ஆரம்பகட்ட நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது.
 சில வங்குரோத்து அரசியல் செய்வோர் சாய்ந்தமருது மக்களின் உணர்வுகளுடன் விளையாட முயற்சிகின்றனர். அவர்களது ஆசைகள் ஈடேறப்போவதில்லை கடந்த 2001ம் ஆண்டு தன்னை சாய்ந்தமருது மக்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தனித்தலைவராக பிரகடனப்படுத்தியபோது அப்போது உங்களிடம் காணப்பட்ட உத்வேகத்தையும் உணர்வலைகளையும் இன்றும் உணர்ந்துள்ளேன்.


கட்சியின் தலைமைத்துவத்தை தந்து கௌரவித்த சாய்ந்தமருது மக்களின் அபிலாசைகளை புறக்கணிக்கவேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லை. குறுகிய கால எல்லைக்குள் எங்களது கைக்கு வழங்கப்பட்ட சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி சபைக் கோரிக்கை நியாயமானது. அவற்றை பெற்றுக்கொடுப்பது எங்களது கடமை இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீம் சாய்ந்தமருதில் 2015-07-31 அன்று இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top