அமெரிக்க
ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரியை
கேவலமாக சித்தரித்து
ஆஸ்திரேலியாவில்
வரையப்பட்ட சுவர் ஓவியம்
மெல்போர்ன்
நகரின் பிரதான
வீதியில் இருக்கும்
ஒரு இருசக்கர
வாகன மெக்கானிக்
ஷெட்டின் சுவரில்
அமெரிக்க நாட்டின்
தேசிய கொடியை
நீச்சல் உடையாக
அணிந்திருக்கும் ஹிலாரி கிளிண்டன் பை நிறைய
பணத்துடன் நின்றிருப்பது
போல் வரையப்பட்டிருந்தது.
இந்த
ஓவியத்துக்கு பக்கத்தில் முஸ்லிம் பெண்கள அணியும்
புர்காவுடன் ஹிலாரி தோற்றம் அளிக்கும் மற்றொரு
ஓவியமும் வரையப்பட்டதால்
இந்த ஓவியங்கள்
ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தன. இதை அறிந்து
மெல்போர்ன் நகரில் வாழும் அமெரிக்கர்கள் கொதிப்படைந்தனர்.
இதுதொடர்பான
தகவல் கிடைத்ததும்
விரைந்து சென்ற
அரசு அதிகாரிகள்
அந்த ஓவியத்தை
உடனடியாக அழிக்கும்படி
அந்த கட்டிடத்துக்கு
உரிமையாளரை வலியுறுத்தினர். மீறினால், சட்டப்படியான நடவடிக்கையை
சந்திக்க நேரிடும்
எனவும் எச்சரித்தனர்.
இதையடுத்து,
மேற்கண்ட இரு
ஓவியங்களும் கருப்புநிற பெயிண்டால் அழிக்கப்பட்டன.
0 comments:
Post a Comment