ஏறாவூரில் இடம்பெற்ற 26வது ஷுஹதாக்கள் தினம்
ஏறாவூர், காட்டுப்பள்ளிவாசலில் 26 ஆவது சுஹதாக்கள் நினைவுதின நிகழ்வுகள் நேற்றுஅஸர் தொழுகையுடன் ஆரம்பித்து
மஹ்ரிபுடன் நிறைவுக்கு வந்தது.
சம்மேளன தலைவர் ஜனாப் ஷஹீத் அவர்களின் தலைமையுரையும்
வரவேற்புரையும் நடாத்த, அல்ஹாஜ் லத்தீப் அவர்களால் பயங்கரவாதிகளால் தாக்குண்ட ஏறாவூரை பற்றி மிக
காத்திரமாக குறுகிய நேரத்தில் ஒப்புவித்தார்.
அதன்பின்னர் ஜாமிஉல் அக்பர் ஜும்ஆ பள்ளி பேஸ் இமாம் ஹாபீஸ்
அப்துல்லாஹ் மௌலவி அவர்களின் உரையை தொடர்ந்து, ஜம்மியதுல் உலமாசபை தலைவர் ஹாரீஸ் மௌலவி
அவர்களின் துஆவுடன், சம்மேளன செயலாளர்
ஜனாப் செய்யது அகமட் அவர்கள் நன்றியுரை கூறி இனிதே முடிவுற்றது.
ஏறாவூர் பள்ளிவாசல்கள் முஸ்லீம் நிறுவனங்களின் சம்மேளன
ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர்அஹமத், பாராளுமன்ற. உறுப்பினர் அலிஷாஹிர் மௌலானா,
மாகாண சபை உறுப்பினர்
சுபைர் ஹாஜி, முன்னாள்
அமைச்சர் பஸீர் சேகுதாவூத், முஸ்லீம் கலாசார திணைக்கள் கிழக்கு மாகாண பொறுப்பாளர் ஜனாப் ஜுனைட் நளீமி, பிரதேச செயலாளர் அல்ஹாஜ் SLM.ஹனிபா, வைத்திய அதிகாரி அல்ஹாஜ் Dr.தாரிக் ஆகியோர்
உட்பட உலமாக்கள், மத்ரஸா மாணவர்கள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டு
சிறப்பித்தனர்





0 comments:
Post a Comment