பெருநாட்டில் நிலநடுக்கம்
வீடுகள் இடிந்ததில் 4 பேர் பலி
பெருநாட்டில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் வீடுகள் இடிந்ததில்
4 பேர் பலியாகினர்.தென் அமெரிக்காவில் உள்ள பெருநாட்டில் அரிகுவானா மாகாணத்தின் தென் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் யான்கியூ மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் அதிர்ந்து குலுங்கின.
இதனால் அங்குள்ள ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்தன. இந்த நிலநடுக்கத்தில் 50 வீடுகள் மற்றும் பெரிய கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.
யான்கியூ நகரில் உள்ள ஹொட்டல் இடிந்து பலத்த சேதமடைந்தது. நிலநடுக்கம் காரணமாக பல வீதிகளில் பிளவு ஏற்பட்டு துண்டானது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தடை ஏற்பட்டது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது. எனவே அப்பகுதி இருளில் மூழ்கியது. மக்கள் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். 1200 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்ததில் 4 பேர் உயிரிழந்தனர். 68 பேர் காயம் அடைந்தனர். மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். காயத்துடன் மீட்கப்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே 5.3 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கெல்லோமா மாகாண தலைநகர் சிவாய் நகரில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து பல பூமி அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியிருந்தனர்.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அரிகுவானா மாகாண மக்களுக்கு அரசு உணவு, உடைகளை வழங்கியுள்ளது. வீடுகளை இழந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment