சாய்ந்தமருது
தோணாவில்
கோடிக்கணக்கில் தொலையும் மக்கள் பணம்!
-அஷ்ஷேக்
மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்-
தோணா ஆற்றை மாத்திரமல்ல சாய்ந்தமருது நிர்வாகத்தையே
அந்தமக்களிடம் கையளிப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகும்!
சாய்ந்தமருது தோணா ஆற்றை அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே 30 மில்லியன் (3 கோடி) ஒதுக்கப்பட்டு பணிகள் நிறைவுற்ற
நிலையில் 50 மில்லியன் (5 கோடி) செலவாகியுள்ளதாகவும் கூறப்படுகின்றது,
ஆனால் மீண்டும் ஆற்று வாழைச் செடிகளால் தோணா ஆறு முழுமையாக
ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது
மீண்டும் ஒருமுறை தோணா ஆற்றை அபிவிருத்தி செய்வதற்கு 250 மில்லியன்கள் (25 கோடி)ஒதுக்கப்பட வேண்டிய தேவையுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.
தோணா ஆற்றை மாத்திரமல்ல சாய்ந்தமருது நிர்வாகத்தையே
உடனடியாக அந்தமக்களிடம் கையளிப்பதே இன்றைய கட்டாயத் தேவையாகும்.
உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ், இந்நாள் அமைச்சர்கள் ஹகீம், ரிஷாத் என எல்லோரும் சாய்ந்தமருது தனியான
பிரதேச சபையாக பிரகடனப்படுத்தப் படும் என தெரிவித்துள்ளார்கள்.
2017 ஜனவரி மாதம் உள்ளூராட்சித் தேர்தல்கள்
இடம்பெறவுள்ள நிலையில் உடனடியாக இந்தவிவகாரம் முடிவுக்கு கொண்டு வரப் படல்
வேண்டும்.
குறிப்பு:- சாய்ந்தமருது தோணாவை கடந்த 100 நாள் திட்டத்தில் எனது அமைச்சின்50 மில்லியன் ரூபா செலவில் சுத்தம் செய்திருந்தோம். அதன் அடுத்த கட்டஅபிவிருத்திக்காக 250 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது”
சாய்ந்தமருதில் இடம்பெற்ற “வீட்டுக்கு வீடு மரம்’ திட்டத்தின் இரண்டாம் கட்ட அங்குரார்ப்பண விழாவில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இத்தகவலை தெரிவித்து பேசியிருந்தார்.
0 comments:
Post a Comment