தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை
21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்
இவ்வருடத்திற்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை நாளை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.
இப்பரீட்சைக்கு 350,701 மாணவர்கள் தோற்றுவுள்ளதோடு, நாடளாவிய ரீதியில் 2,959 பரீட்சை மத்திய நிலையங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு, பரீட்சார்த்திகள் தமது பரீட்சை நிலையங்களுக்கு சமூகமளிக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.டி.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
முதலாவது பகுதி (Part I)- மு.ப. 9.30 மணி - மு.ப. 10.15
இரண்டாவவது பகுதி (Part II)- மு.ப. 10.45 மணி - ந.ப. 12.00
சகல மாணவர்களும், தமது சீருடையின் இடது பக்கத்தில் தமது சுட்டெண்ணை காட்சிப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தமது வினாத்தாளில் சுட்டெண்ணை சரியாக குறிப்பிடுமாறும் கோரப்பட்டுள்ளனர்.
அத்துடன் பேனா மற்றும் பென்சிலை பயன்படுத்தி வினாக்களுக்கு விடையளிக்க முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை கடமைக்காக 28,000
பேர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment