யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட
முஸ்லிம் மக்களுக்கான விசேட நடமாடும் சேவை


யாழ் மாவட்டத்தில் மீள்குடியேற்றப்பட்ட  முஸ்லிம் மக்களுக்கான விசேட நடமாடும் சேவையானது இன்றையதினம்  ஒஸ்மானியா கல்லூரியில் நடைபெற்றது.
யாழ் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம்,சாவகச்சேரி,வேலணை ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை உள்ளடக்கியதாக இந் நடமாடும் சேவை நடைபெற்றது.

காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய இந்த சேவையில்  பெருந்தொகையான முஸ்லிம் மக்கள் கலந்து கொண்டனர்.வெயிலினையும் பொருட்படுத்தாமல் ஒஸ்மானியா பாடசாலை வீதியின் இருபக்கங்களிலும் மக்கள் கூ.ட்டம் திரண்டிருந்தது.இந்நிகழ்வானது . மாலை 3 மணிவரை நடைபெற்றது. இதன்மூலம் பெருமளவானோர் பயனடைந்தனர் என அறிவிக்கப்படுகின்றது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top