அமெரிக்கா விமான விபத்தில் 6 பேர்உயிரிழப்பு

அமெரிக்காவில் சிறிய வகை விமானம் விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 6 பேரும் உயிரிழந்தனர்.
அந்த நாட்டின் விர்ஜினியா மாகாணம், ஃபிரெட்ரிக்ஸ்பர்க் நகரிலுள்ள விமான நிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து விர்ஜினியா காவல்துறை அதிகாரி எஃப்.எல். டைலர் கூறியதாவது:
ஓடுபாதையில் விமானத்தைத் தரையிறக்கிய விமானி, திடீரென ஏதோ காரணத்தால் அந்த முயற்சியைக் கைவிட்டு மீண்டும் அந்த விமானத்தை பறக்க வைக்க முயன்றார். எனினும் மரத்தில் மோதி அந்த விமானம் தீப்பிடித்தது. இதில் விமானத்தில் இருந்த 6 பேரும் உயிரிழந்தனர் என்று தெரிவித்துள்ளார்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top