லண்டனில் கத்தியால் தாக்கியதில் பெண் பலி; 6 பேர் படுகாயம்
பிரிட்டன்
தலைநகர் லண்டனின்
முக்கிய பகுதியில்
6 பேரை விரட்டி
விரட்டி வாலிபர்
கத்தியால் குத்தினார்.
இதில் மூதாட்டி
ஒருவர் பலியானார்.
பிரிட்டன் தலைநகர்
லண்டனின் மையப்
பகுதியில் பிரிட்டிஷ்
அருங்காட்சியகம் அருகே ரஸ்செல் சதுக்கம் உள்ளது.
நேற்று முன்தினம்
இரவு அங்கு
ஒரு மர்ம
மனிதன் சுற்றித்
திரிந்தான். திடீரென அவன் தான் வைத்திருந்த
பெரிய கத்தியால்
அங்கிருந்தவர்களை விரட்டி விரட்டி குத்தினான். அதில்
6 பேர் படுகாயம்
அடைந்தனர். தகவல் அறிந்ததும் பொலிஸார் விரைந்தனர்.
காயம்
அடைந்த 6 பேரும்
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் 60 வயது
மதிக்கத்தக்க ஒரு பெண் பரிதாபமாக
இறந்தார். அவரது
பெயர் வெளியிடப்படவில்லை.
அவரை தவிர
காயம் அடைந்த
5 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையே கத்தியால்
குத்திய மர்ம
நபரை பொலிஸார்
தேடி வந்தனர்.
உள்ளூர் நேரப்படி
இரவு 10.40 மணிக்கு அப்பகுதியில் கத்தியுடன் சுற்றித்
திரிந்த 19 வயது வாலிபரை பொலிஸ்அதிகாரி ஒருவர்
துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தார். அவன் தீவிரவாத தொடர்புடையவனாக
இருக்கலாம் என பொலிஸார் கருதுகின்றனர். தாக்குதலை
தொடர்ந்து ஸ்காட்லாந்து
யார்டு பொலிஸார்
600 பேர் கூடுதலாக
லண்டன் நகர
வீதியில் பாதுகாப்பிற்காக
நிறுத்தப்பட்டனர்.
0 comments:
Post a Comment