சாய்ந்தமருது கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலயத்திற்கு
ஒரு தொகுதி தளபாடங்கள் கையளிப்பு.
டாக்டர் ஜெமீல் பாடசாலை அதிபரிடம் கையளித்தார்.
சாய்ந்தமருது
கமு/றியாழுல்
ஜன்னா வித்தியாலயத்தின்
விஷேட கல்விப்
பிரிவு மாணவர்கள்களுக்கு
ஒரு தொகுதி
தளபாடங்கள் டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களிணால் பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுடீன் அவர்களிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது.
சாயந்தமருது
கமு/றியாழுல் ஜன்னா வித்தியாலயத்தில் விஷேட கல்வி கற்கும் மாணவர்கள்களின் நன்மை கருதி
டாக்டர் எம்.ஐ.எம்.ஜெமீல் அவர்களின்
வேண்டுகோளின் பெயரில் முஸ்லிம் பெண்கள் நடவடிக்கைகளுக்கான
ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஜனாபா. லைலா
உடையாரின் குடும்பத்தினர் இதற்கான பங்களிப்பைச் செய்திருந்தனர்.
பாடசாலை
அதிபர் எம்.ஐ.சம்சுடீன்
தலைமையில் நடைபெற்ற
நிகழ்வில் சாய்ந்தமருது
பதில் கோட்டக்
கல்வி பணிப்பாளர்
ஏ.எல்.சக்காப், விஷேட
கல்வி ஆசிரிய
ஆலோசகர் ஏ.
ஹமீத், ஆங்கிலப்பாட
ஆலோசகர் எஸ்.யூ. அன்வர்
சித்திக், பாடசாலை
அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் மற்றும் பெற்றோர்களும்
கலந்து கொண்டனர்.
படங்கள்: யூ.கே. காலித்தீன்
0 comments:
Post a Comment