விஜய நந்தசிறியின் குடும்பத்திற்கு
ஐந்து லட்சம் ரூபா பணம்!
மறைந்த கலைஞர் விஜய நந்தசிறியின் குடும்பத்திற்கு அரசாங்கம் ஐந்து லட்சம் ரூபா பணம் வழங்கியுள்ளது.
அண்மையில் காலமான கலைஞர் விஜய நந்தசிறியின் குடும்பத்தாருக்கு ஐந்து லட்சம் ரூபா நிதியை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்துள்ளார். இதன் அடிப்படையில் குறித்த பணம் வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. அபயகோனுக்கு ஜனாதிபதி விடுத்த பணிப்புரைக்கு அமைய நேற்றைய தினம் இந்தப் பணம் விஜய நந்தசிறியின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டுள்ளது
இதேவேளை, விஜய
நந்தசிறி அவர்களுக்கு
இறுதி அஞ்சலி
செலுத்துவதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள்
நேற்று (10) பிற்பகல் அன்னாரது பூதவுடல் வைக்கப்பட்டுள்ள
கல்கிசை கலாபுரயில்
அமைந்துள்ள இல்லத்திற்கு விஜயம் செய்தார்.
பூதவுடலுக்கு
இறுதி அஞ்சலி
செலுத்திய ஜனாதிபதி
அவர்கள், திருமதி
தேவிகா மிஹிராணி
மற்றும் பிள்ளைகள்
இருவருக்கும் தனது அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டார். திருமதி ஜயந்தி சிறிசேன அவர்களும்
இதில் கலந்துகொண்டார்.


0 comments:
Post a Comment