நேற்று ஒன்று சொல்கிறார்கள். இன்று ஒன்று பேசுகின்றார்கள்
.
சொந்த சிந்தனையே இல்லாமல் செயலாற்றுகிறார்கள்
அன்று மர்ஹும் எ..எச்.எம். அஷ்ரஃப் கூறிய கருத்து
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப் பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்துகின்றார் என்றால் மக்கள் அதிக எண்ணிக்கையில் அக்கூட்டத்திற்குச் செல்வர். அன்னார் சிறந்த கருத்துக்களை மக்களுக்கு எடுத்து சொல்வார்.
அன்று மர்ஹும் எ..எச்.எம். அஷ்ரஃப் கூறிய கருத்து இன்று முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு
மிக மிக பொருத்தமானதாக உள்ளது.
1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன்னாள் பிரதி அமைச்சராக இருந்த எஸ். நிஜாமுதீன் சட்டக்கல்லூரி மாணவராக இருந்த போது “முஸ்லிம்களின் இன்றைய நிலை” எனும் தலையங்கத்தில் ஒரு கருத்தரங்கு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
இக்கருத்தரங்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் பேசும் போது பின்வருமாறு தெரிவித்தார்:-
மக்களின் அபிலாசைகளை தலைமைப்பீடத்திற்கு எடுத்துக் கூற வேண்டியவர்களாகத்தான் எந்தத் தலைவர்களும் கடமையாற்ற வேண்டும். அதைவிடுத்து கட்சியின் தலைமைப்பீடக் கொள்கைகளை மக்களிடம் திணிப்பது தலைவர்களின் செயலல்ல.
இன்று எமது முஸ்லிம் தலைவர்கள் சமூகத்தின் அங்கிகாரம் இல்லாமல் திடீர் திடீரென முடிவுகளை எடுக்கிறார்கள். நேற்று ஒன்று சொல்கிறார்கள். இன்று ஒன்று பேசுகின்றார்கள். சொந்த சிந்தனையே இல்லாமல் இவர்கள் ஏஜண்ட்கள் போல செயலாற்றுகிறார்கள். எமது நிலைப்பாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை விமர்சிப்பதல்ல. அவர்கள் சமுதாயத்தை தலைமைப்படுத்தக்கூடியவர்கள். அவர்களின் நிலைப்பாடு என்ன என்பதையே கூறுகின்றோம்.
நன்றி: தினபதி 1987.01.17

0 comments:
Post a Comment