பாகிஸ்தானில்
நடந்த பயங்கர குண்டுவெடிப்பில்
70 பேர் உடல் சிதறி பலி 120 பேர் காயம் (படங்கள்)
பாகிஸ்தானின்
குவெட்டா நகரில்,
மருத்துவமனையில் நடந்த குண்டுவெடிப்பில், 70 பேர்
உடல் சிதறி
உயிரிழந்தனர்; 120 பேர் காயமடைந்தனர்.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள்.
பாகிஸ்தானில், ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில்,
தலிபான் மற்றும்
அல் - குவைதா
பயங்கரவாதிகள் அவ்வப்போது குண்டுவெடிப்புகளை
நிகழ்த்தி வருகின்றனர்.
இந்நிலையில்,
பலுாசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில்,
வழக்கறிஞரும், 'பார் கவுன்சில்' தலைவருமான பிலால்
அன்வர் காசி,
நேற்று முன் தினம் காலை காரில்
சென்றபோது, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அவரது உடல்,
அங்குள்ள அரசு
மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்டது.
இதையடுத்து, அங்கு ஏராளமான வழக்கறிஞர்கள் கூடியிருந்தனர்.
அப்போது, மருத்துவமனையில்
சக்தி வாய்ந்த
குண்டு வெடித்து
சிதறியது. இதைத்
தொடர்ந்து, மர்ம நபர் ஒருவன் துப்பாக்கியால்,
அங்கு கூடிஇருந்தவர்களை
நோக்கி சரமாரியாக
சுட்டான். இதில், 70 பேர் பலியாகினர்;
மேலும், 120 பேர் காயமடைந்தனர். அவர்களில் பலர்,
வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்.
அந்த
பகுதி முழுவதும்,
உடல் பாகங்கள்
சிதறிக் கிடந்தன;இரத்தம் உறைந்து இருந்தது.
இதையடுத்து, அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. மருத்துவமனையைச் சுற்றிலும் பொலிஸார் குவிக்கப்பட்டனர். 'தற்கொலைப்படை பயங்கரவாதி
இந்த தாக்குதலை
நடத்தி இருக்கலாம்'
என, முதல்கட்ட
விசாரணையில் தெரியவந்து உள்ளது. தாக்குதலுக்கு காரணமான
பயங்கரவாதிகள் குறித்து,பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பலுாசிஸ்தான்
பகுதியில் பயங்கரவாதிகள்,
வழக்கறிஞர்களை குறி வைத்து தொடர்ந்து தாக்குதல்
நடத்தி வருகின்றனர்.
கடந்த ஜூன்
மாதம், பலுாசிஸ்தான்
சட்டக் கல்லுாரி
முதல்வர் அமானுால்லா
சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதைத் தொடர்ந்து,
பிரபல வழக்கறிஞர்
ஆல்வி, சுட்டுக்
கொல்லப்பட்டார்.
இதை
கண்டித்து, வழக்கறிஞர்கள், கோர்ட் புறக்கணிப்பு போராட்டத்தை
நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான், பார் கவுன்சில் தலைவர்
பிலால் காசியும்,
நேற்று முன் தினம் கொல்லப்பட்டுள்ளார்.










0 comments:
Post a Comment