பிரபல சிங்கள
நடிகர் விஜய நந்தசிறி காலமானார்
பிரலபல
சிங்கள தொலைக்காட்சி
மற்றும் மேடை
நாடக கலைஞரும்
நடிகருமான விஜய
நந்தசிறி காலமானார்.
களுபோவில
போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர்
சிகிச்சை பலனின்றி
உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
1944ஆம் ஆண்டு விஜய நந்தசிறி
பிறந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர்
திரைப்படம், தொலைக்காட்சி நாடகம், மேடை நாடகம்,
தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக தமது ஆற்றலை
வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நோனாவருனி
மாஹத்துருனி, இயஸ் போஸ் ஆகிய பிரபல
தொலைக்காட்சி நகைச்சுவை தொடர்களில் நடிகராகவும் அவர்
மக்கள் மனதில்
இடம்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


0 comments:
Post a Comment