ஈரான் நாட்டின் அணு உலை ரகசியத்தை அறிந்த
பிரபல விஞ்ஞானிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்



ஈரான் நாட்டு அணு உலைகள் மற்றும் அணு ஆயுத ரகசியங்களை அறிந்து வைத்திருந்த ஷாராம் அம்ரிக்கு அந்நாட்டு சிறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரியவந்துள்ளது.
தூக்கிட்டு கொல்லப்பட்ட ஷாராம் அம்ரியின் உடல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டில் உள்ள அணு மேம்பாட்டு ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஷாராம் அம்ரி என்பவர் கடந்த 2009-ம் ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு மக்கா நகருக்கு சென்ற நிலையில் திடீரென்று மாயமானார். பின்னர், கடந்த 2010-ம் ஆண்டு நாடு திரும்பிய இவர் மீது கடந்த 2010-ம் ஆண்டு தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றப்பிரிவுகளின்கீழ் வழக்கு தொடரப்பட்டது.

ஈரானில் உள்ள அணு உலைகள் மற்றும் அணு ஆயுத ரகசியங்களை அமெரிக்காவுக்கு தெரிவித்ததாகவும் இவரைப்பற்றி உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஷாராம் அம்ரி சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top