அவுஸ்திரேலியாவின் முதல் திருநங்கை
சுவாரஸ்ய நிகழ்வுகள்
தான்
ஒரு திருநங்கை
என்பது பற்றிய
சரியான விழிப்புணர்வு
இல்லாமலே மூன்று
பெண்களை அடுத்தடுத்து
20 ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து
வாழ்ந்தவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது,
பொதுஇடத்தில் குளிக்கும்போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.
அவுஸ்திரேலியாவை
சேர்ந்த எட்வர்ட்
டி லேசி
எவான்ஸ் என்பவர்
19 ம் நூற்றாண்டில்
ஒரு ஆணாக
வாழ்ந்தார். அவருக்கான வாழ்க்கை பதிவுப்படி மூன்று
மனைவிகள் இருந்துள்ளனர்.
ஒரு குழந்தைக்கு
தந்தையாகவும் இருந்துள்ளார்.
அவர்
1879 ல் மன
தளர்ச்சியால் பாதிக்கப்பட்டார். பெண்டிகோ
மருத்துவமனையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள் பிரிவில்
சேர்க்கப்பட்டார்.
அங்கு,
அவர் பொது
இடத்தில் குளிப்பதை
தவிர்த்தார். இதை புரிந்துகொண்ட மருத்துவமனை பணியாளர்கள்,
மனநல பாதிப்பின்
காரணமாகவும் இருக்கலாம் என கட்டாயப்படுத்தி குளிக்க
வைக்க ஆடையை
கழற்றியபோது, அவர் ஒரு திருநங்கை என்ற
உண்மை வெளியானது.
அவுஸ்திரேலியாவின் முதல் திருநங்கை:
வரலாற்றுப்
பதிவில் அவுஸ்திரேலியாவின்
முதல் திருநங்கையான
எவான்ஸ், உயிரியல்
செக்ஸ் பிரிவுகளை
பற்றிய போதிய
விழிப்புணர்வு இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்.
எவான்ஸ்
சுரங்கத் தொழிலாளியாகவும்,
கருவிகள் உருவாக்கும்
கொல்லனாகவும் விக்டோரியாவில் உள்ள ப்ளாக்வுட், பெண்டிகோ,
மற்றும் ஸ்டாவெல்
மாவட்டங்களில் வாழ்ந்துள்ளார்.
20 ஆண்டுகளில்
அவர் திருமணம்
செய்துகொண்ட மூன்று பெண்களில் ஒருவர் கூட
இவருடைய ஆண்மை
குறையை பற்றி
வெளியில் சொல்லவில்லை.
ஆனால், அவர்களுக்கு
ஆன வழியை
பார்த்துக் கொண்டனர் என்பதும் தெரிகிறது.
அப்போது
உயிரியல் பாலினத்தில்
திருநங்கை பற்றிய
போதுமான விழிப்புணர்வுகள்
இல்லாதிருந்ததும் ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளார்
ஹெரால்ட் சன்.
ஆனால்,
மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்படும் முன்பான பதிவில்
அவருடைய மனைவி
ஜூலியா மார்குவாண்டின்
குழந்தைக்கு தந்தை என்ற பதிவும் செய்யப்பட்டுள்ளது.
ஒரு குழப்பமான
விடயம் எந்த் தெரிரிவிக்கப்பட்டுள்ளது.
அவருடைய
40 வயதில் முகம்,
மார்பு உட்பட்ட
உடல் வலிமை
ஒரு ஆணுக்குரியது
போலவே இருந்துள்ளது.
ஆனாலும் தாடி
இருக்கவில்லை. அவருடைய வயிறு, இடுப்புப் பகுதி
ஆண், பெண்
இருபாலருக்கும் பொருந்துவதாக உள்ளது.
மேலும்,
பெண்ணுக்கான சிகை, உடையலங்காரங்கள் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களில் அதற்கும் பொருத்தமாக இருக்கிறார்.
மருத்துவமனை உடல் பரிசோதனை செய்து விவரித்தது ஒரு கடினமான அணுகுமுறை. அவர் மனநல மருத்துவமனையிலிருந்து வெளியாகி 1880 ல் மெல்போர்னில் குடியேறியுள்ளார்.
ஆகஸ்ட் 1901 ல் மெல்போர்ன் வீட்டில் இறந்த அவர் தன் குறுகிய வாழ்நாளில் ஒரு சிறந்த ஆண் மகனாக வெளித்தோற்றத்தில் எல்லோரையும் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment