போலி கடவுச்சீட்டுகள்,விசாவுடன்
6 பேர் கைது
போலி
விசா மற்றும்
கடவுச்சீட்டுகளுடன் 6 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத
விசாரணைப்பிரிவிற்கு கிடைத்த தகவலுக்கமைய
மேற்கொண்ட சுற்றவளைப்பின்
போதே சந்தேகநபர்கள்
கைது செய்யப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள்
குறித்த போலி
ஆவணங்களை கனடாவுக்கு
செல்பவர்களுக்காக தயாரித்துள்ளதாகவும், இவர்களிடம்
200 போலி கடவுச்சீட்டுகள்
கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்
விசா முத்திரைகளுக்காக
பயன்படுத்தப்பட்ட கணினி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதோடு, குறித்த போலி விசாவுக்காக நபர்களிடம்
தலா ஒன்றரை
இலட்சம் பெறப்பட்டுள்ளதாகவும்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை
சந்தேகநபர்கள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின்
மேற்பார்வையின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், இவர்களை
நாளைய தினம்
நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார்
குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment