நோர்வே நாட்டுப் பிரதமர் எர்னா சொல்பேர்க்
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பு


இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நோர்வே நாட்டுப் பிரதமர் எர்னா சொல்பேர்க், இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சந்தித்தார்.
இலங்கைக்கும் நோர்வே அரசாங்கத்திற்குமிடையே இருந்துவரும் வரலாற்று ரீதியான நட்புறவு தொடர்பாக நினைவுகூர்ந்த தலைவர்கள் இரு நாடுகளுக்கிடையேயான இத்தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக விரிவாக கலந்துரையாடியதோடு, இரு நாடுகளுக்கிடையேயும் புதிய உறவுகளை கட்டியெழுப்புவதற்கு இச்சந்திப்பு ஒரு சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் தெரிவித்தனர்

தற்போதைய அரசாங்கம் நல்லிணக்கம், ஜனநாயகம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில் திருப்தி தெரிவித்த நோர்வே நாட்டின் பிரதமர், இலங்கையின் இயற்கை எழில் மற்றும் உபசரிப்பு தொடர்பிலும் மகிழ்ச்சி வெளியிட்டார். நோர்வே நாட்டின் பிரதான சுற்றுலா மத்திய நிலையமாக இலங்கையை ஆக்குவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.














0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top