முன்னாள் அமைச்சர்  அபுசாலியின் சகோதரர்
வெட்டிக் கொலை!


ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் மறைந்த எம்.எல்.எம்.அபுசாலியின் இளைய சகோதரரான எம்.எல்.எம்.சலீம், பலாங்கொடையிலுள்ள அவரது வீட்டில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கொலை செய்யப்பட்ட சலீம் என்பவர், அவரது வீட்டில் தனிமையிலேயே இருந்துள்ளார் என்றும் பிரிதொரு நபரோ அல்லது நபர்களோ, கடந்த 3ஆம் திகதி புதன்கிழமை இரவு, அவரது வீட்டுக்குள் நுழைந்து, அவரை வெட்டிக் கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட சலீமுக்கு 87 வயது எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

எம்.எல்.எம். அபுசாலி, ஜே.ஆர். ஜயவர்தன, ரணசிங்க பிரேமதாச மற்றும் டி.பி. விஜேதுங்க ஆகிய ஜனாதிபதிகளின் அரசாங்கங்களில் அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top