தலைமைத்துவப் பண்பு ஒரு மாணவனிடத்தில் வளர்வதற்கு

 நாளாந்த சிறப்புத் தொழிற்பாடு தேவை

ஓய்வு பெற்ற விரிவுரையாளர் முஸ்தபா தெரிவிப்பு

(எஸ்.அஷ்ரப்கான்)


தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்  கொள்வதில் பாடசாலைகள் பெரும் பங்கு வகிக்கின்றன என ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் எம்..எம். முஸ்தபா தெரிவித்தார்.
இஸ்லாமிய சமூக மேம்பாட்டுக்கான தேசிய அமையம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி கருத்தரங்கு அமைப்பின் சாய்ந்தமருது தலைமைக் காரியாலயத்தில்) இடம்பெற்றது. இங்கு பிரதான வளவாளராக கலந்து கொண்டு உரையாற்றும்போதே விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றும்போது மேலும் தெரிவித்ததாவது,
பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு விதமான செயற்பாடுகள் மாணவர்கள் தலைமைத்துவ பண்புகளை வளர்த்துக் கொள்வதற்கு துணை புரிகின்றன. சாரணியம், கலை மன்றம், விளையாட்டு போன்ற செயற்பாடுகள் முக்கியமானவை. இவற்றினால் மாணவர்களின் தலைமைத்துவ பண்புகள் மட்டுமல்ல ஆளுமைப் பண்புகளையும் ர்த்துக் கொள்ள முடியும்.
 நடத்தைக் கோலங்களை சிறப்பாக மாற்றுவதன் ஊடாக நல்ல ஆளுமையை பெற்றுக் கொள்ள முடியும். இன்று நமது நாட்டுக்குத் தேவை நல்ல தலைவர்களேயாகும். இவர்களை சிறு வயதிலிருந்தே நாம் கட்டியெழுப்பி உருவாக்க வேண்டும்.
தலைவராவதற்கு எல்லோருக்கும் ஆசைதான். ஆனால் தலைமை தாங்குவது எளிதான விஷயமல்ல. ஒரு பெரும் சுமையை இலாபகமாகத் தூக்கிச் சுமக்கும் திறன். தலைமைப் பண்புகள் என்பவை என்ன ? அவற்றை எப்படி வளர்த்துக்கொள்வது ? ஒரு நல்ல தலைவரின் பொறுப்புகள் என்னென்ன ? நாட்டை வழி நடத்துபவர் தேசத் தலைவர், குடும்பத்தை வழி நடத்துபவர் குடும்பத் தலைவர், பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவியரை வழி நடத்துபவரை மாணவர் தலைவர் என்கிறோம். அவர்கள் மற்றவர்களை வழிநடத்தும் தலைமைப் பண்பை பெற்றிருப்பதால் தலைவராக இருக்கிறார்கள்.
வெறும் அறிவு மட்டுமே இருந்தால் ஒருவருக்கு தலைமைப் பண்பு இருக்கின்றது என்று கருத முடியாது. அறிவு அனுபவம் மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு ஆகியவற்றையும் கொண்டவரையே தலைமைப் பண்பு கொண்டவர் என்று கூறலாம். 'விளையும் பயிர் முளையிலே தெரியும்' என்பார்கள்.
ஒவ்வொருவரும் அவரவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பை உணரத் தொடங்கும்போது அவர் தலைவராவதற்கான முதல் படிக்கட்டில் ஏறிவிட்டார் என்று கருதலாம். புத்திசாலித்தனமாக அல்லது விவேகத்துடன் நடந்துகொள்ளுவது சிறந்த தலைவருக்குத் தேவையான ஒன்று ஆகும். வழி நடத்தும் பொறுப்பில் இருப்பதால் தலைவருக்கு அனுபவ அறிவு மிகவும் இன்றியமையாதது.
எனவேதான் தலைமைத்துவப் பண்பு ஒரு மாணவனிடத்தில் வளர்வதற்கு அவனது நாளாந்த சிறப்புத் தொழிற்பாடு தேவையாகும். இதனை உணர்ந்து செயற்படும்போது இன்றை சிறுவர்கள் நாட்டின் நாளைய தலைவர்களாக மாறலாம் என்றும் குறிப்பிட்டார்


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top