மலேசிய மலாக்கா மாநில முதலமைச்சரும்
கிழக்கு மாகாண முதலமைச்சரும்

மாகாண அபிவிருத்தி தொடர்பாகப் பேச்சுவார்த்தை


மலேசிய மலாக்கா மாநில முதலமைச்சர் டதுக் செரி ஐஆர் எச்.ஜே இட்ரிஸ் பின் எச்ஜே ஹாரொன் (Datuk seri ir. Hj idris bin hj haron) மற்றும் இலங்கை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று காலை 10.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலைய முக்கிய பிரமுகர் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றபோது.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாகவும், கொழும்பு, திருகோணமலை, ஒலுவில் ஆகிய துறைமுகங்கள் அபிவிருத்தி செய்தல் தொடர்பாகவும், கிழக்கில் முதலீடு செய்தல் தொடர்பாகவும் அதற்கான முதலீட்டாளர்களை கிழக்கு மாகாணத்துக்கு கொண்டு வருதல் சம்மந்தமாகவும் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடாத்தியதாக முதலமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top