நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின்
மாவட்ட இணைப்புக் காரியாலயம் அம்பாறையில் திறந்து வைப்பு
நகர
திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் அம்பாறை
மாவட்ட இணைப்புக்
காரியாலயத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரவூப் ஹக்கீம்
இன்று 18 ஆம் திகதி வியாழக்கிழமை திறந்து வைத்தார்.
அம்பாறை
நகர மத்தியில்
அமைந்துள்ள இக்காரியாலய திறப்பு விழாவில், பிரதியமைச்சர்
பைசல் காசிம்,
நீர் வழங்கல்
வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதித்
தலைவர் ஷபீக்
ரஜாப்தீன், அமைச்சின் உயரதிகாரிகள், அமைச்சரின் இணைப்புச்
செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம். முபீன்
உட்பட பலர்
கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment