அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில்
ஹஜ் கடமைக்குச் செல்லும்
முஸ்லிம்கள் இல்லையா?
முதலமைச்சர்
ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்களிடம் மக்கள் கேள்வி!
கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாத்திரமான முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றாரா? என்று அம்பாறை, திருக்கோணமலை மாவட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் ஹாஜிகளை கண்ணியப்படுத்துவதில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் மட்டக்களப்பு மாவட்டத்தில் காட்டும் அதிக அக்கறையை அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் காட்டுவது குறைவாக இருப்பதனாலேயே இப்படியான ஒரு கேள்வியை எழுப்புகின்றனர்.
இவ்வருடம் மக்கா நகர் சென்று புனித ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள ஹாஜிகளை கண்ணியப்படுத்தி வழியனுப்பிவைக்கும் நிகழ்வொன்றினை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் நேற்று 14 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மட்டக்களப்பில் ஏற்பாடு செய்திருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஹஜ் கடமைக்காக செல்லவிருக்கும் இவர்களை முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட். அழைத்து இரவு விருந்துபசாரம் வழங்கி ஹஜ்ஜின்போது செய்ய வேண்டிய கருமங்கள் என்பன விபரிக்கப்பட்டு உரை நிகழ்த்தி, கட்டியணைத்து முகமன் (முஷாபகா) செய்து வழியும் அனுப்பிவைத்திருந்தார்.
இந்நிகழ்வைப் பாராட்டியிருக்கும்அம்பாறை, திருக்கோணமலை மாவட்ட மக்கள் இப்படியாக
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஹாஜிகளை கண்ணியப்படுத்தி வழியனுப்பிவைக்கும் நிகழ்வு நடாத்தி
கெளரவிக்கும் நிலையில் அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்களில் ஹஜ் கடமைக்குச் செல்வதற்கு முஸ்லிம்கள் இல்லையா? கிழக்கு மாகாண
முதலமைச்சரின் மாகாணத்தில் அம்பாறை, திருக்கோணமலை மாவட்டங்கள் இல்லையா? என இம்மாவட்டங்களில் வாழும் மக்கள் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்புகின்றனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருக்கோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்திற்கு முதலமைச்சராக இருக்கும் ஹாபிஸ் நஸீர் அஹமட் அவர்கள் மூன்று மாவட்ட மக்களையும் சரி சமனாக வைத்து தனது செயல்பாடுகளைச் செய்ய வேண்டும் என மக்கள் விரும்புகின்றார்கள்.
0 comments:
Post a Comment