பேஸ்லைன் பாதை போக்குவரத்து துண்டிப்பு!
பாத யாத்திரிகர்களின் மனிதவெள்ளம் நிரம்பி வழிகின்றது
கொழும்பு,
தெமட்டகொடை, பேஸ்லைன் வீதி ஊடாக கூட்டு
எதிர்க்கட்சியின் பாதயாத்திரை பயணிக்கும் நிலையில் அப்பாதையின்
போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றதுது.
பாதயாத்திரையின்
இறுதி நாளான
இன்று முன்னைய
நாட்களை விடவும்
அதிகளவான ஆதரவாளர்கள்
பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில்
பாதயாத்திரையின் முடிவில் பொதுக்கூட்டம் நடத்த முன்பதிவு
செய்யப்பட்டிருந்த ஹைட்பார்க் மைதானத்தில்
பலவந்தமாக பொதுக்கூட்டத்தை
நடத்துவதற்கும் கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி
செயலகத்தின் தலையீடு காரணமாக பொரள்ளை கம்பல்
மைதானம் ஒதுக்கப்படுவதில்
ஏற்பட்ட தாமதத்தை
முன்னிட்டு கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த முடிவை
மேற்கொண்டுள்ளனர்.
ஹைட்பார்க்
மைதானத்தில் பொதுக்கூட்டத்தை நடத்த இடமளிக்காது போனால்
லிப்டன் சுற்றுவட்டாரத்தை
முற்றுகையிட்டு பொதுக்கூட்டத்தை நடத்தும் தீர்மானத்தையும் கூட்டு
எதிர்க்கட்சியின் முக்கியஸ்தர்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
0 comments:
Post a Comment