தென் கொரிய நாடாளுமன்றின் உணவகத்தில்
எதிர்க்கட்சித்
தலைவரை சந்தித்த மஹிந்த!
தென்
கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவருடன் முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸ சந்திப்பு ஒன்றை
இன்று நடத்தியுள்ளார்.
முன்னாள்
ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ஸ தற்போது தென்கொரியாவிற்கு
விஜயமொன்றை செய்துள்ளார்.
மஹிந்த
ராஜபக்ஸ இன்றைய தினம்
தென் கொரிய
எதிர்க்கட்சித் தலைவர் கிம் ஜொங்கை சந்தித்து
பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கிம்
ஜொங் மட்டுமன்றி
எதிர்க்கட்சியின் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்துள்ளார். தென் கொரிய நாடாளுமன்றின் உணவகத்தில்
இந்த சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.
இந்த
சந்திப்பு சுமார்
இரண்டு மணித்தியாலங்கள்
நீடித்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழப்பெரும
இலங்கை ஊடகங்களுக்கு
தெரிவித்துள்ளார்.




0 comments:
Post a Comment