சூடுபிடித்துள்ள
அமெரிக்க தேர்தல் பிரசாரம்
இருதரப்பின் சார்பில் கடுமையான விமர்சனங்கள்
''அமெரிக்க
ஜனாதிபதித் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளின்டனுக்கு,
ஆதரவாக அமெரிக்க ஊடகங்கள் செயல்டுகின்றன,'' என, குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு
டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க
ஜனாதிபதித் தேர்தல், நவம்பர், 8ல், நடக்க உள்ளது. இதில், குடியரசு கட்சியின் சார்பில்,
பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், 70; ஜனநாயகக் கட்சியில், முன்னாள்
வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன், 68, போட்டியிடுகின்றனர்.
ஜனாதிபதித்
தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், இருதரப்பின் சார்பில், கடுமையான விமர்சனங்கள்
வைக்கப்படுகின்றன. முன்னாள்
மாடல்
அழகியும், டிரம்பின் மனைவியுமான மெலனியாவின் நிர்வாண படம், சமீபத்தில், அங்கு பத்திரிகை
ஒன்றில் வெளியானது. இந்நிலையில், டொனால்டு டிரம்ப் கூறியதாவது:அமெரிக்க பத்திரிகைளும்,
'டிவி' சேனல்களும்,வேண்டுமென்றே, ஹிலாரிக்கு ஆதரவாக செயல்படுகின்றன. சி.என்.என்.,
'டிவி' சேனல், 'ஹிலாரி நியூஸ் நெட்வொர்க்காக' செயல்படுகிறது.
இதுபோலவே,
சில பத்திரிகைகள், ஹிலாரிக்கு ஆதரவாக, எந்தவித நியாயமும் இன்றி, செயல்படுகின்றன. தங்கள்
வியாபாரம் ஒன்றே குறிக்கோளாக வைத்து, அவை செயல்படுகின்றன. என் கருத்துக்களை, சமூக வலைதளங்களில்
வெளியிட்டு வருகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.
குடியரசு
கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்,பென்சில்வேனியாவில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பேசியதாவது:ஹிலாரி
ஒரு சாத்தான்; அந்த சாத்தானுக்கு, ஆதரவாக, ஜனநாயக கட்சியின், வேட்பாளர் போட்டியில்
இருந்து பெர்னி சாண்டர்ஸ் விலகினார்.
பெர்னி,
தன் ஆன்மாவை சாத்தானுக்கு விற்று விட்டார். ஹிலாரி எந்த திறமையும் இல்லாதவர். இவ்வாறு
அவர் பேசினார்.
அமெரிக்க
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, சி.என்.என்., 'டிவி' சேனல் நடத்திய தேர்தலுக்கு முந்தைய
கருத்துக் கணிப்பில், ஹிலாரிக்கு, 52 சதவீதமும், டிரம்ப்க்கு, 43 சதவீதமும் ஆதரவு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, சி.பி.எஸ்.,
நியூஸ் நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், ஹிலாரிக்கு, 46 சதவீதமும்,
டிரம்ப்புக்கு, 39 சதவீதமும் ஆதரவு இருப்பதாக கூறியுள்ளது.
0 comments:
Post a Comment