சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை
மரைக்காயர்களில் சிலர் அமைச்சர் ஹக்கீம் அவர்களோடு
சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசல் மரைக்காயர்களில் சிலர் சபையின்
தலைவர் அல்-ஹாஜ் வை.எம் ஹனிபா தலைமையில் சாய்ந்தமருதில் இன்று 13 ஆம் திகதி
சனிக்கிழமை இடம்பெற்ற "வீட்டுக்கு வீடு மரம்" செயற்திட்டத்தில் கலந்து கொண்ட
முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களைச் சந்தித்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை
பெற்றுக்கொள்வது தொடர்பாக மீண்டும் நினைவுபடுத்தி பேசியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருதுக்கு தனியான
உள்ளுராட்சி சபை பெற்றுக்கொள்வது தொடர்பாக சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசல் மரைக்காயர்
சபையினர் கடந்த10 ஆம் திகதி புதன்கிழமை உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவை
நேரில் சந்தித்து சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை பெற்றுக்கொள்வதன் அவசியம்பற்றி
விளக்கம் அளித்ததுடன் கோரிக்கை அடங்கிய கடிதத்தையும் அமைச்சரிடம் கையளித்திருந்தனர்.
இந்நிலையில் சாய்ந்தமருது ஜும் ஆப் பள்ளிவாசல் மரைக்காயர் சபையினர்
இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை மீண்டும் சந்தித்து சாய்ந்தமருது மக்களின் நீண்ட நாள்
கோரிக்கையை நினைவு படுத்தியிருக்கின்றனர்.
இசந்திப்பின்போது சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்
அவர்களும் கலந்து கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.






0 comments:
Post a Comment