"எல்லோருக்கும் ஒரே இரத்தம்"
இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது


"வெவ்வேறு ஆனாலும் சமம் " (Different Yet Equal ) என்ற சமாதானத்தையும், சகலருக்குமான சம உரிமையுடைய வாழ்வையும் வலியுறுத்தும் அமைப்பினால் கொழும்பு பெளத்தாலோக்க மாவத்தையில்  "எல்லோருக்கும் ஒரே இரத்தம்" என்ற தொனிப்பொருளின் அடிப்படையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இனவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது "சிங்ஹ லே" என்ற இனவாத அமைப்பினால் இதற்கு எதிப்பு தெரிவிக்கப்பட்டதனால் சற்று குழப்பநிலை ஏற்பட்டது. இருந்த போதும் இனவாதத்தை எதிர்த்து குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்களால் ஒற்றுமையாக எழுப்பப்பட்ட கோஷத்தினாலும் தொடரான முயற்சியாலும் அவை முறியடிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நிறைவுசெய்யப்பட்டது. 
குழப்பநிலையின் போது சகோதரர் அசாத் சாலி மிகவும் துணிவாக அவற்றை எதிர்த்து பதிலளித்து போராடியமை பாராட்டுக்குரியது இவ்விடத்திற்கு வருகை தந்து கலந்து கொண்ட சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா (srinath Perera -Attorney At Law) அவர்களுக்கு சமாதானத்தையும், சகலருக்குமான சம உரிமையுடைய வாழ்வையும் வலியுறுத்தும் அமைப்பினால் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.

















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top