ஏறாவூர் வியாபாரிகளுக்கு இலவச தராசுகள்
கிழக்கு முதலமைச்சரின் அதிரடி நடவடிக்கை!
வியாபாரிகளின் வியாபார நடவடிக்கைகளை இலகுபடுத்தும் முகமாக முதல்வரின் அதிரடி நடவடிக்கையினால் ஏறாவூர் பழையசந்தை மற்றும் பெண்சந்தைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு இலவச தராசுகளை வழங்கப் படவுள்ளன.
கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபிஸ்
நசீர் அஹமட் அவர்களின்
நிதி ஒதுக்கீட்டில் மீன்வியாபாரிகளுக்கு தங்களுடைய
வியாபாரத்தை இலகுவாக மேம்படுத்தும் நோக்கில் இவ் இலவச தராசுகள் வழங்கப்படவுள்ளது. தராசின்றி
வியாபாரம் செய்யும் சிலரின் நடவடிக்கையினைப் பார்வையிட்ட முதலமைச்சர் அவர்களுக்கும்
ஏனையோர்களுக்கும் சிறந்த தராசுகளை வழங்குவதற்கு முன்வந்துள்ளமையானது அனேகமான வியாபாரிகளுக்கும்,
நுகர்வோருக்கும் நன்மைபயக்கும் என்பது திடம்.
வியாபாரிகளுக்கான இலவச தராசுகள் அடுத்த வாரம் முதலமைச்சரினால்
ஏறாவூர் காரியாலயத்தில் வைத்து வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

0 comments:
Post a Comment