ரியோ ஒலிம்பிக்:
ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது
பிரான்ஸ்
வீரர் சமிர் எய்ட் சையித் கால் உடைந்து பரிதாபம்
ரியோ ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியின்போது பிரான்ஸ் வீரரான சமிர் எய்ட் சையித்
இடது கால் உடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள்
மற்றும் சக நாட்டு வீரர்கள் அதிர்ந்து போனார்கள்
ரியோ ஒலிம்பிக்
தொடரில் நேற்றுமுதல் போட்டிகள்
நடைபெற்று வருகிறது.
பல்வேறு போட்டிகளின்
தகுதிச் சுற்றுக்கிடையில்
ஜிம்னாஸ்டிக் தகுதிச் சுற்றும் நடைபெற்றது. இந்த
போட்டியில் பிரான்ஸ் அணி சார்பில் சமிர்
எய்ட் சையித்
கலந்து கொண்டார்.
இவரது சுற்று
வரும்பொது துள்ளிக்
குதித்து சென்று
கொண்டிருந்தார். கடைசியாக டைவிங் செய்து தரையில்
நிற்கும்போது அவரது இடது கால் சரியாக
தரையில் பதியாமல்
நிலைதடுமாறி போனார். இதில் அவரது இடது
கால் உடைந்தது.
இதனால் அரங்கத்தில்
இருந்த ரசிகர்கள்
மற்றும் சக
நாட்டு வீரர்கள்
அதிர்ந்து போனார்கள்.
உடனடியாக மருத்துவக்குழு
விரைந்து வந்து
அவரை மருத்துவமனைக்கு
அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம்
பெரும் கவலையை
ஏற்படுத்தியுள்ளது. சமிர் 2013-ம்
ஆண்டு நடைபெற்ற
ஐரோப்பியன் சாம்பியன்ஷிப் தொடரில் தங்க பதக்கம்
வென்றவர். ஏற்கனவே
2012-ம் ஆண்டு
நடைபெற்ற ஒரு
தொடரிலும் இதுபோன்று
காயத்திற்கு உள்ளாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.
0 comments:
Post a Comment