சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை
பள்ளிவாசல் முக்கியஸ்தர்கள் அமைச்சரை நேரில் சந்திப்பு
சாய்ந்தமருதுக்கு தனியான
உள்ளுராட்சி சபை பெற்றுக்கொள்வது தொடர்பாக சாய்ந்தமருது
ஜும் ஆப்
பள்ளிவாசல் மரைக்காயர் சபையினர் சபையின் தலைவர்
அல்-ஹாஜ்
வை.எம்
ஹனீபா தலைமையில்
இன்று 10 ஆம்
திகதி புதன்கிழமை உள்ளுராட்சி
மாகாண சபைகள்
அமைச்சர் பைஸர்
முஸ்தபாவை நேரில்
சந்தித்து சாய்ந்தமருதுக்கு
தனியான உள்ளுராட்சி
சபை பெற்றுக்கொள்வதன்
அவசியம்பற்றி விளக்கம் அளித்ததுடன் கோரிக்கை அடங்கிய
கடிதத்தையும் அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.
குறித்த விடயத்தில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அமைச்சர்
ரிஷாத் பதியுதீன் ஆகிய இரண்டு அமைச்சர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாகவும், இன்ஷா அள்ளாஹ் கூடிய விரைவில் நிறைவேறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா நம்பிக்கை தெரிவித்துள்ளதாக பள்ளிவாசல் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.












0 comments:
Post a Comment