அகில
இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாட் பதியுதீனின் பங்களிப்புடன் சவூதியிலிருந்து
கொண்டு வரப்பட்ட பேரீச்சம்பழங்கள் பள்ளிவாசல்களுக்கும்
பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கொழும்பில்
மேல்மாகாண சபை
உறுப்பினர் மொஹமட் பாயிஸின் ஏற்பாட்டில் இன்று
காலை இப் பேரீச்சம்பழங்கள் இவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.
கடந்த வாரமும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களால்
பாதிக்கப்பட்ட கொலன்னாவ பிரதேச மக்களுக்கு
பேரீச்சம்பழங்கள் வழங்கப்பட்டதாகவும் மேல்மாகாண சபை உறுப்பினர் மொஹமட் பாயிஸினால் தெரிவிக்கப்பட்டது
தற்போது
புனித நோன்பு
அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில்,
முகத்துவாரம் கிம்புலாஎல பகுதியிலுள்ள மேல்மாகாண சபை
உறுப்பினர் பாயிஸின் அலுவலகத்தில் அவை பகிர்ந்தளிக்கப்பட்டன.
இதேவேளை
இந்த பேரீச்சம்பழங்கள்
பள்ளிவாசல்களுக்கும், நோன்பு நோற்கும்
முஸ்லிம் மக்களுக்கும்
வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த
புனிதமிக்க ரமழான் மாதத்திலேயே திருகுர்ஆன் அருளப்பட்டுள்ளதுடன்,
ஆயிரம் மாதங்களை
விட சிறந்த
இரவான லைலத்துல்
கத்ர் எனும்
இரவு இம்மாதத்தில்
உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment