அமைச்சர்கள் பௌசி, ரவூப் ஹக்கீம், கபீர் ஹாசிம், பைசர் முஸ்தபா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி ஆகியோர் நேற்றைய தினம் ஜனாதிபதியைச் சந்தித்ததாகவும் இப்பிரத்தியேக சந்திப்பில் அமைச்சர் றிஷாட் அச்சத்தின் காரணமாக ஒழிந்து விட்டதாகவும் இந்த ரமழான் மாதத்தில் அப்பட்டமான பொய் வதந்தியை கூறி சமூக வலைதளங்களில் ஒரு சிலர் எழுதிவருவது குறித்து
முஸ்லிம் சமூகத்திலுள்ள நடுநிலை புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இப்படியான அப்பட்டமான பொய்களைப் பரப்பி சமூக வலைதளங்களில் எழுதி
வருபவர்கள் எல்லாம் வல்ல அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும் எனவும் சம்மந்தப்பட்டவர்களுக்கு
வேண்டுகோள் விடுக்கின்றனர்.
ரமழான் மாதத்தின் கடைசி பத்தில் ஆகிரத்தில் அதிக நன்மை பெறலாம்
என்ற நல்ல நோக்கத்திலும் எமது முஸ்லிம் சமூகத்தின்
பாதுகாப்புக்காக அல்லாஹ்விடத்தில் துஆ (பிரார்த்தனை) செய்யும் பொது நோக்கமாகவும் அல்லாஹ்வுக்கு அஞ்சிய ஒரு அடியானாக உம்றாச் செய்வதற்கு மக்காவுக்குச் சென்றுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீனை
அச்சத்தின் காரணமாக ஒழிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் எழுதுவது எவ்வளவு
பெரிய பாவம் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும் எனவும் கவலை வெளியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment