இரத்தினபுரி  தொகுதி அனர்த்த

ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியால் நியமனம்

அனர்த்தத்திற்கு உட்படாத பிரதேசங்களை சேர்ந்த அமைச்சர்களை அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளின் ஒருங்கிணைப்பு செயற்பாடுகளுக்காக அமைப்பாளராக நியமிக்க ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்கள் இன்று 1 ஆம் திகதி முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அந்த வகையில் இரத்தினபுரி மாவட்டத்திற்கான அனர்த்த ஒருங்கிணைப்பு அமைப்பாளராக அமைச்சர் றிசாட் பதியுதீன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அனர்த்தத்திற்குள்ளான தொகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் சகல ஒருங்கிணைப்பு தொடர்பாகவும் கண்டறிதல் இந்த புதிய அமைப்பாளர்களின் கடமையாகும்.

இரத்தினபுரி தொகுதி அனர்த்த ஒருங்கிணைப்புக்கு பொறுப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியால் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்களின் பெயர் பட்டியல் பின்வருமாறு.

களுத்துறை மாவட்டம்   

  புளத்சிங்கள தொகுதி               – நிமல் சிறிபால டி சில்வா
அகலவத்தை தொகுதி              – எஸ்.பி.திசாநாயக்க
பண்டாரகம தொகுதி               – பாட்டலி சம்பிக்க ரணவக்க
மத்துகம தொகுதி                  – லக்ஷ்மன் கிரியெல்ல
ஹொரண தொகுதி                 – சரத் அமுணுகம
களுத்துறை தொகுதி               – ரவுப் ஹக்கீம்
அர்ஜூன ரணதுங்க

மாத்தறை மாவட்டம்      

  அக்குரஸ்ஸ தொகுதி              – அநுர பிரியதர்ஷன யாப்பா
தெனியாய தொகுதி                – அகில விராஜ் காரியவசம்
மாத்தறை தொகுதி                 – ரவி கருணாநாயக்க
வெலிகம தொகுதி                 – ரஞ்சித் சியம்பலாபிட்டிய
ஹக்மன தொகுதி                  – விஜித் விஜயமுனி சொய்சா

காலி மாவட்டம்          

  ஹினிதும தொகுதி                – துமிந்த திசாநாயக்க
பத்தேகம தொகுதி                 – பி.ஹரிசன்
பெந்தரஎல்பிட்டிய தொகுதி       – விஜயதாச ராஜபக்ஷ


இரத்தினபுரி மாவட்டம்     

கலவான தொகுதி                   – சுசில் பிரேமஜயந்த
இரத்தினபுரி தொகுதி               – ரிஷாட் பதியுதீன்
எஹலியகொட தொகுதி             – எஸ்.பி.நாவின்ன
பெல்மடுல்ல தொகுதி               – காமினி ஜயவிக்ரம பெரேரா
நிவித்திகல தொகுதி                – நவின் திசாநாயக்க

அம்பாந்தோட்டை மாவட்டம்    –         பைசர் முஸ்தபா
ஹரின் பெர்னான்டோ

கேகாலை மாவட்டம்           –         தயா கமகே அவர்கள்

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
















0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top