'கூட்டுறவு அபிவிருத்தி 2020 தொலைநோக்கு' திட்டத்தை கைத்தொழில், வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
95வது சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வு (ஜூலை 01) பிற்பகல் குருணாகலை மாலிகாபிடிய விளையாட்டரங்கில் நடைபெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட்
பதியுதீன் தலைமையில் இடம்பெற்ற சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வில் சர்வதேச கூட்டுறவு தின நிகழ்வுடன் இணைந்ததாக ஒழுங்குசெய்யப்பட்டிருந்த போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் பிரதம அதிதியாகக் கலந்து
சிறப்பித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டதுடன், குறைந்த வருமானம் பெறும் ஒரு குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் திறப்பும் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.
கூட்டுறவு சபையினால் வடமேல் மாகாண கூட்டுறவு ஊழியர் நிதியத்திற்காக வழங்கப்பட்ட 100 மில்லியன் ரூபா பெறுமதியான காசோலை ஜனாதிபதி அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment