புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைசம்பவம்
முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித்
ஜயசிங்க
எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியல்
புங்குடுதீவு
மாணவி வித்தியா
கொலைச் சம்பத்தின்
முக்கிய சந்தேகநகரான
சுவிஸ் குமார்
என்பவர் தப்பிச்
செல்வதற்கு உதவியதாக வடக்கு மாகாண முன்னாள்
மூத்த பிரதி
பொலிஸ் மா
அதிபர் லலித்
ஜயசிங்க மீது
குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குற்றப்
புலனாய்வுத் திணைக்களத்தினரின் விசாரணையின்
பின்னர் நேற்று
மதியம் அவர்
கைது செய்யப்பட்டிருந்தார்.
ஊர்காவற்துறை
நீதிவானின் இல்லத்தில் இன்று காலை அவர்
முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை
எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில்
வைக்க நீதிவான்
உத்தரவிட்டார். அவர் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலைக்கு
அழைத்துச் செல்லப்படுகின்றார் என அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment