ஒரு வருட பயிற்சியுடன் பட்டதாரிகளுக்கு தொழில்
அமைச்சரவை அங்கீகாரம்
பட்டதாரிகளுக்கு
தொழில் வாய்ப்புகளை
வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேன தலைமையில், நேற்று செவ்வாய்கிழமை
நடைபெற்ற அமைச்சரவைக்
கூட்டத்திலேயே, இதற்கான அங்கீகாரம் கிடைத்தது.
மாவட்ட
மட்டத்தில், ஒரு வருட பயிற்சிக் காலத்தை
அடிப்படையாகக் கொண்டு, முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தினால்
இந்த வேலை
வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவையில்
இதற்கான முன்மொழிவினை
பிரதமர் ரணில்
விக்ரமசிங்க சமர்ப்பித்தார்.
தேசிய
கொள்கைகள் மற்றம்
பொருளாதார அலுவல்கள்
அமைச்சர் எனும்
வகையில், மேற்படி
முன்மொழிவினை அவர் சமர்ப்பித்தார்.
தொழில்
வாய்ப்புகளை வழங்குமாறு கோரி, நாட்டில் பட்டதாரிகள்
தொடர்ச்சியான சத்தியாக்கிரக நடவடிக்கைகளில்
ஈடுபட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
Recruitment of
graduates to public service (Document No – 73)
It is important to obtain the service of
graduates in development process of the country and therefore, the proposal
made by Hon. Prime Minister Ranil Wickremesinghe, in his capacity as the
Minister of National Policies and Economic Affairs, to recruit graduates
subject to a one year training period in district level for vacancies decided
by the Department of Management Services,
was approved by the Cabinet of Ministers.
0 comments:
Post a Comment