பார்ப்பவர் மனதை கவரும் வகையில் தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனப்புர கோட்டையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பெத்தாகன என்ற ஈரநிலப் பூங்கா!
தலைநகர் ஸ்ரீ ஜயவர்த்தனப்புர கோட்டையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள பெத்தாகன என்ற ஈரநிலப் பூங்காவானது பார்ப்பவர் மனதை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பெத்தாகன ஈரநிலப் பூங்காவானது கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் திகதி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
இலங்கையின் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த புதிய பாராளுமன்ற கட்டடத் தொகுதியை சுற்றி காணப்படுகின்ற தியவன்ன ஓயாவுடன் இணைந்ததாக இந்த பெத்தாகன பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
தியவன்ன ஓயாவைச்சுற்றி பசுமையாக அமையப்பெற்றுள்ள குறித்த பூங்கா 18 ஹெட்டயர் நிலப்பரப்பில் அமைந்துள்ளதோடு அழகிய நீர் நிலைகள், பறவைகள், பாலூட்டி விலங்குகள் என பலவற்றைத் தன்னகத்தே கொண்டுள்ளமை சிறப்புக்குரியதாகும்.
இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற பெத்தாகன பூங்காவானது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் உள்ளூர் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளதோடு தலைநரின் நடுவே காணப்படும் இயற்கை வனத்தினைப் போன்று காட்சியளிக்கின்றது.
குறித்த பூங்காவானது வருடத்தின் ஒவ்வோர் ஒகஸ்ட் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதிகளில் வெளிநாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பறவைகளின் இருப்பிடமாகவும் காணப்படுகின்றது.
கொழும்பில் இவ்வாறான பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளமை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.
0 comments:
Post a Comment