சிரியா அடுக்குமாடி கட்டிடத்தில்
குண்டுவெடிப்பு - 11 பேர் பலி
சிரியாவில் குர்திஷ் போராளிகளிடம் இருந்து நேற்று மீட்கப்பட்ட ஆப்ரின் நகரில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் இன்று குண்டு வெடித்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
சிரியா நாட்டில் அரசுக்கு எதிரான குர்திஷ் போராளிகள் வசமுள்ள பகுதிகளை மீட்க அரசுப் படைகளும், கிளர்ச்சியாளர்கள் குழுவும் கடுமையான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். குறிப்பாக, நாட்டின் வடமேற்கு பகுதியில் குர்திஷ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்ரின் நகரை கைப்பற்ற அரசுப் படையுடன், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்தவர்களும் இணைந்து கடந்த இரண்டு மாதங்களாக உச்சகட்டப் போர் நடத்தி வந்தனர்.
இதன் விளைவாக ஆப்ரின் நகரம் குர்திஷ் போராளிகளிடம் இருந்து நேற்று மீட்கப்பட்டதாக அரசு அறிவித்தது.
இந்நிலையில், ஆப்ரின் நகரில் உள்ள மாடி கட்டிடம் ஒன்றில் குர்திஷ் போராளிகள் வைத்திருந்த வெடிகுண்டு இன்று வெடித்து சிதறியது.
இதில், ‘சிரியாவை விடுவிப்போம்’ என்னும் புரட்சிப் படையை சேர்ந்த 4 போராளிகள் மற்றும் அப்பகுதியில் வசித்த பொதுமக்களில் 7 பேர் என மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக துருக்கி நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
0 comments:
Post a Comment