அம்மா இறந்தபின் ஆதரவற்றுள்ளோம்
அப்பாவுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்
ஜனாதிபதிக்கு இருபிள்ளைகள் கடிதம்

அம்மா இறந்தபின்னர் நாம் இருவரும் ஆதரவற்ற நிலையில் உள்ளோம். எம்மிருவரின் எதிர்கால நிலையை கருத்தில்கொண்டு எமது அப்பாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி வீட்டிற்கு அனுப்புமாறு ஆநாதரவான இருபிள்ளைகள் ஜனாதிபதிக்கு கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
 தந்தையார் அரசியல் கைதியான நிலையில் சிறைவாசம் அனுபவிக்க, தமது தாயாருடன் வாழ்க்கை நடத்திவந்த இரு பிள்ளைகள் தற்போது தாயார் சுகவீனமடைந்து இறந்த நிலையில் ஆதரவற்றநிலையில் உள்ளனர்.
இந்நிலையில் குறித்த இரு பிள்ளைகளுகம் இணைந்து தமது நிலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உருக்கமான கடிதமொன்றை எழுதியுள்ளனர்.
அக் கடிதத்தில் அவர்கள் குறிப்பிட்டுள்ளதாவது,
அன்புள்ள ஜனாதிபதி மாமாவுக்கு,
அம்மா இறந்த பின் நானும் எனது தங்கையும் ஆதரவற்ற நிலையில் நிற்கின்றோம். எமக்கு தற்கோது 65 வயதான நோய்வாய்ப்பட்டுள்ள அம்மம்மா ஒருவர் இருக்கின்றார்.
நானும் எனது தங்கையும் கல்வியைத் தொடர்வதற்கு எமது அப்பா வேண்டும். அப்பாவுக்கு எமது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பொது மன்னிப்பு வழங்கி எங்கள் வீட்டிற்கு அனுப்பி வையுங்கள்.
உங்களை நானும் எனது தங்கையும் நேரில் சந்திக்க விரும்புகின்றோம். அதற்குரிய நேரத்தை ஒதுக்கித் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்என அண்ணனும் தங்கயும் எழுதி கையொப்பமிட்டுள்ளனர்.
குறித்த கடிதம் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஊடாக ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கு கிடைக்கும் வகையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top