.தே. நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இன்று சந்தித்து பேச்சு



ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து பாலித்த தேவரப்பெரும விலகியமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இதனை கூறியுள்ளார். மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, ஜனாதிபதியை நேற்று சந்தித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தீர்மானம் மிக்க மத்திய குழுக்கூட்டம் 29ஆம் திகதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை அடுத்து கட்சியில் மேற்கொள்ளப்படவேண்டிய மறுசீரமைப்பு யோசனைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட மூன்று குழுக்களின் அறிக்கைகள் தொடர்பில் இதன்போது தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பிரதான பதவிகளை மாற்றம் செய்வது தொடர்பிலும் இந்த மத்தியக் குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top