கொழும்பிலிருந்து வட பகுதிக்குச் சென்ற
21 அம்பியூலன்ஸ் வண்டிகள்

வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 21அம்பியூலன்ஸ் வண்டிகள் நேற்று மாலை யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டன.
வட பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச அம்பியூலன்ஸ் வண்டி சேவையை செயற்படுத்தும் நோக்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையிலேயே குறித்த அம்பியூலன்ஸ் வண்டிகள் வடமாகாணத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு ஒன்றில் வைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இந்த அம்பியூலன்ஸ் வண்டிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.
வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
வவுனியாவில் மூன்று, மன்னாரில் மூன்று, முல்லைத்தீவில் மூன்று, மாங்குளத்தில் இரண்டு, கிளிநொச்சியில் நான்கு, யாழ்ப்பாணத்தில் ஏழு அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 மணிநேரமும் நோயாளிகள் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு இந்த அம்பியூலன்ஸ் வண்டி சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்படுகின்றது





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top