அம்பாறை
மாவட்ட கரையோர தமிழ், முஸ்லிம் மக்களை
அபிவிருத்தியிலும்
இலவச சேவைகள் வழங்குவதிலும்
புறக்கனிக்கும்
நல்லாட்சி அரசு
அம்பாறை மாவட்ட தமிழ்,முஸ்லிம் மக்கள் வாழும் பிரதேசங்கள்
அபிவிருத்தியில் புறக்கனிக்கப்படுவது மாத்திரமல்லாமல் ஏனைய பகுதி மக்கள் பெற்று கொள்ளும்
இலவச சேவைகளை வழங்குவதிலும் இங்குள்ள மக்கள் பின் தள்ளப்படுவதாக இப்பிரதேச மக்கள்
கவலை வெளியிடுகின்றனர்.
வடமாகாண மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொழும்பிலிருந்து 21அம்பியூலன்ஸ்
வண்டிகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வட பகுதியில் உள்ள மக்களுக்கு இலவச அம்பியூலன்ஸ் வண்டி
சேவையை செயற்படுத்தும் நோக்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
வடக்கு மாகாணத்தில் 21 அம்பியூலன்ஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன. இது
போன்று ஊவா மாகாணத்தில் 29 வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
வவுனியாவில் மூன்று, மன்னாரில் மூன்று, முல்லைத்தீவில் மூன்று, மாங்குளத்தில் இரண்டு, கிளிநொச்சியில் நான்கு, யாழ்ப்பாணத்தில் ஆறு அம்பியூலன்ஸ் வண்டிகள்
சேவையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
24 மணிநேரமும் நோயாளிகள் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பினை மேற்கொண்டு இந்த
அம்பியூலன்ஸ் வண்டி சேவையினை இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும் என
குறிப்பிடப்படுகின்றது.
ஆனால், இப்படியான சேவைகளை வழங்குவதில் இந்த நல்லாட்சி அரசு
கிழக்கு மாகாண மக்களை குறிப்பாக அம்பாறை மாவட்ட கரையோர மக்களை புறந்தள்ளுவதாக
இங்குள்ள மக்கள் கவலை வெளியிடுகின்றனர்.
0 comments:
Post a Comment