பள்ளிவாயல்களுக்கான
தேசிய விருதுகள் வழங்கும் வைபவம்
பள்ளிவாயல்களுக்கான தேசிய விருதுகள் வழங்கும் வைபவம் நேற்று(14)
சனிக்கிழமை மாலை கொழும்பு அலரிமாளிகயில் இடம் பெற்றது.
நாடு முழுவதிலிமிருந்தும் 152 ஜும்ஆ
பள்ளி வாயல்கள் பிரதிநிதிகள் இவ்வைபவத்தில் கலந்து கொண்டிருந்தனர்
அகில
இலங்கை பள்ளிவாயல்களுக்கான
தேசிய நல்லினத்திற்ககான
துறைக்கும், ஜும்ஆ பள்ளி வாயல்களுக்கும் தேசிய
விருதுகள் இங்கு வழங்கப்பட்டன.
2 வருட
காலத்திற்குள் ஒரு ஊரினது பள்ளிவாய நிருவாகிகளினால்
அதாவது
இன ஒற்றுமைக்கான
செயற்பாடுகளில் தாம் செய்த பங்களிப்புகள் அது
போன்று
வறுமை ஒழிப்புகான செயற்பாடுகள், கல்வி
மற்றும் சமூக சேவைகள் தொடர்பாக 4 தலைப்புகளிலிலும்
சிறந்த முறையில்
சேவைகள் ஆற்றியுள்ளமை
குறித்த
விபரங்களை கடந்த வருடம்
முஸ்லிம் கலாசார
திணைக்களத்தினால் கோரபட்ட நிலையில் தேசிய விருதுக்கான பள்ளிவாயல்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தன.
முஸ்லிம் கலாசார திணைக்களமும் "ஏ.ஆர்.சீ."என்ற ஆலோசனை மற்றும் நல்லிணக்கத்திற்கான அமைப்பு ஆகியன இணைந்து ,ஏற்பாடு செய்திருந்த இவ்வாரான ஒரு தேசிய விருது வழங்கும் விழா சர்வதேச ரீதியில் இதுவே முதன் முறையாக உள்ளதாக அமைப்பின் பணிப்பாளர் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தனது ஆரம்ப உரையில் குறிப்பிட்டார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர்களான எம்.எச்.எம்.ஹலீம், ரிஸாட் பதியுதீன், மனோகணேசன், ஏ.எச்.எம்.பெளஸ், , அலி சாஹிர் மெளலானா, ரவி கருனா நாயக்க மற்றும் எம்.பிக்களான முஜிபுர் ரஹ்மான் , எம்.மரிக்கார். அ.இ.ஜ.உலமா சபைத் தலைவர் அஷ். ரிஸ்வி முப்தி. உள்ளிட்ட மாற்று மத பெரியார்கள். பள்ளி வாயல் நிருவாகிகள் என பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment