பழைய விலைக்கே எரிபொருள் விற்பனை
இலங்கை
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால்
நேற்று நள்ளிரவு
முதல் அதிகரிக்கப்பட்ட
எரிபொருட்களின் விலை மீண்டும் குறைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து,
நேற்று நள்ளிரவுக்கு
முன்னர் விற்பனை
செய்யப்பட்ட விலைகளில் இன்றைய தினமும் எரிபொருட்கள்
விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய,
ஒக்டைன் 92 ரக பெற்றோல் ஒரு லீற்றர்
பழைய விலையான
137 ரூபாய்க்கும், ஒக்டைன் 95 ரக
பெற்றோல் ஒரு
லீற்றர் பழைய
விலையான 148 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள்
வெளியாகியுள்ளன.
அத்துடன்,
டீசல் லீற்றரொன்றின்
விலை 109 ரூபாயாகவும்
சுப்பர் டீசல்
லீற்றரொன்றின் விலை 119 ரூபாயாகவும் தொடர்ந்தும் விற்பனை
செய்யப்படுவதாக கூறப்படுகின்றது.
இதேவேளை,
நேற்று நள்ளிரவு
முதல் அமுலுக்கு
வரும் வகையில்
உயர்த்தப்பட்ட எரிபொருள் விலையை உடனடியாக குறைக்குமாறு
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன உத்தரவு
பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி
இருந்தது.
அத்துடன்,
நேற்று காணப்பட்ட
விலையிலேயே எரிபொருள் விற்பனை செய்யுமாறு பெற்றோலிய
கூட்டுத்தாபனத்துக்கு ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன பணித்துள்ளதாக
குறித்த தகவலில்
தெரிவிக்கப்பட்டிருந்தது.
எரிபொருள் விலை தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (06) மாலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பெற்றோலிய வள அமைச்சர் அரஜூன ரணதுங்க ஆகியோருக்கிடையில் இடம்பெறவுள்ளதடன், இதன்போது எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment