திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பு
திறந்த அரசாங்க பங்குடமை தலைவர்கள் சந்திப்பு நேற்று (18) ஜோர்ஜியாவின் திபிலிசி மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமானது.
திறந்த அரசாங்க பங்குடமையானது (OGP) பிரஜைகளுக்கான அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறுதல் மற்றும் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள ஒரு பொறிமுறையாகும். ஜோர்ஜியாவின் பிரதமர் Mamuka Bakhtadze தலைமையில் நேற்று முற்பகல் மாநாடு ஆரம்பமானது. இம்மாநாட்டில் 75 உறுப்பு நாடுகளின் ஜனாதிபதிகள், பிரதமர்கள், சபாநாயகர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினர்.
திறந்த அரசாங்க பங்குடமையை உறுப்பு நாடுகளின் நலன்களுக்காக எவ்வாறு பயன்படுத்துவது என்ற கருப்பொருளின் கீழ் அங்குரார்ப்பண கூட்டத்தொடர் ஆரம்பமானதுடன். அந்நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவ்விடயம் தொடர்பாக கருத்துக்களை தெரிவித்தார்.
0 comments:
Post a Comment