சர்வதேச சந்தைவாய்ப்பை இலக்கு வைத்து
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில்
வர்த்தக இணையதளம் ஆரம்பம்

சிறிய நடுத்தர முன்னணி வர்த்தகர்களுக்கு பெரும் வாய்ப்பு

இலங்கையின் வர்த்தகத் திணைக்களம், உலக வங்கியின் துணையுடன் SLTIP என்றழைக்கப்படும் இலங்கை வர்த்தக தகவல் நுழைவாயில் தளம் இன்று(20.07.2018)  கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன், வர்த்தக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தேசிய வத்தக வசதிகள் குழுவின் சமதலைவியுமான திருமதி சோனாலி விஜேரத்ன, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் திரு. KDN ரஞ்சித் அசோகா,உலக வங்கி குழுவின் சிரேஷ்ட வர்த்தக நிபுணர், மார்கஸ் பார்ட்லி ஜோன்ஸ், இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்குமான ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் HE பிரைஸ் ஹட்ஷெஸன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந்தத் தளத்தின் மூலம் வர்த்தகர்களுக்குத் தேவையான தகவல்கள் பெற்றுக்கொள்ளலாம். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள், அனுமதிப்பத்திரங்கள், தீர்வைகள், சட்ட திட்டங்கள் முதலான தகவல்கள் வழங்கப்படும்.
இந்த இணைய முனையத்தை (SLTIP) திறந்ததன் மூலம் சர்வதேச வியாபார வர்த்தக வரலாற்றின் பாரிய அத்தியாயத்திற்குள் இலங்கை நுழைந்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். உலக வங்கி, இலங்கைக்கான அவுஸ்திரேலிய தூதரகத்தின்; ஒத்துழைப்புடன் இயங்கவுள்ள இந்த இணைய முனையம் இலங்கையின் பாரம்பரிய வர்த்தக முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி சர்வதேச சந்தைப் போட்டிகளில் நிலவும் நவீன சவால்கள், தடைகளை தகர்த்து இலகுவாக சந்தைக்குள் நுழைவதற்கு   உதவும்.
உலகின் பல நாடுகளின் வர்த்தகத்துறையை மேம்படுத்துவதற்கு உதவும்.  இந்த இணைய முனையத் தளத்தில் இலங்கைக்கு முன்னர் இறுதியாக வியட்நாம், இணைந்து கொண்டது. தற்போது  இலங்கையும் இவ்விணையத்தை திறந்துள்ளதால், நாட்டின் வர்த்தகத்துறையில்  பாரிய மறுமலர்ச்சி ஏற்படவுள்ளது.
இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், உலக வங்கியின் சிரேஷ்ட வர்த்தக பிரமுகர் மார்க்கட் பார்லி ஜோன், இலங்கைக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிரைட் ஹட்சீசன் மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இங்கு கருத்து தெரிவித்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சா, நாட்டின் முன்னணி, நடுத்தர, சிறிய   வர்த்தகர்களுக்கு ஏற்றுமதி இறக்குமதி நடைமுறைகள் நடவடிக்கைகள் குறித்து அறிந்து ஆராய்ந்து செயற்படுவதற்கு சிறந்த கருவியாக அமையும் என தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தில் வியாபாரம் முக்கிய வகிபாகத்தை கொண்டுள்ளதாக உலக வர்த்தக வங்கியின் பிரதிநிதி மார்க்கட் பார்லி குறிப்பிட்டார்.  இலங்கையின் மரபு ரீதியான வர்த்தக துறையில் மாற்றம் ஏற்படுத்துவதே இந்த இணையத்தின் நோக்கம் என்றும,; சரியான நேரத்தில் சரியான தகவல்கலூடாக  உள்ளுர் வர்த்தகத்தை விருத்தி செய்வது சர்வதேச சந்தைக்குள் நுழைவதற்கான சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அவுஸ்ரேலிய இலங்கைக்கான தூதுவர் குறிப்பிட்டார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top