வடமாகாணத்தில்
பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள்
பிரதமர்
நாளை யாழ்ப்பாணம் விஜயம்
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பல அபிவிருத்தி திட்டங்களை
முன்னெடுப்பதற்காக நாளை யாழ்ப்பாணம் செல்லவுள்ளார்.
கம்பெரலிய வேலைத்திட்டம் (Enterprise Sri Lanka) உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்களையும் இந்திய
அரசாங்கத்தின் அம்புலன்ஸ் சேவையான சுவசெரிய என்ற அவசர அம்புலன்ஸ் வாகன சேவையும்
பிரதமர் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான கம்பெரலிய வேலைத்திட்ட ஆரம்ப
நிகழ்வு நாளை பிற்பகல் 1.30ற்கு பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளது.
யாழ் நகர சபை திடலில் சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின்
இரண்டாம் கட்டத்தை பிரதமர் நாளை ஆரம்பித்துவைக்கவுள்ளார்.
நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் உள்ள ஹோட்டலில் தேசிய
தொழிலாண்மை விருது விழா பிரதமர் தலைமையில் மாலை 6 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்டான்லி வீதியில் உள்ள இலங்கை வங்கி கிளை
அருகாமையில் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான (Enterprise Sri Lanka) வேலைத்திட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
வட மாகாண தொண்டர் ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமன கடிதங்களை
பிரதமர் வழங்கவுள்ளார்.
இது தொடர்பான நிகழ்வு யாழ்ப்பாணம் இந்து கல்லூரியில்
ஞாயிற்றுக்கிழமை காலை 10மணிக்கு இடம்பெறவுள்ளது.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட பிரதேச பெண்களுக்கான நிதியுதவியும் பிரதமர்
தலைமையில் வழங்கப்படவுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு இந்த நிதியை வழங்கவுள்ளார்.
0 comments:
Post a Comment