ஜோர்ஜிய அரச பங்காண்மை மாநாட்டில்
ஜனாதிபதி மைத்திரிபால
சிறிசேன இன்று உரை
ஜோர்ஜியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திறந்த அரச பங்காண்மை மாநாட்டில் இன்று உரையாற்றவுள்ளார்.
டிபிலிசி மாநாட்டு மண்டபத்தில் இன்று ஆரம்பமாகும் இந்த நிகழ்வில் கூட்டுப் பங்காண்மையின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை இதுவரை மேற்கொண்டுள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி அங்கு கருத்து வெளியிடவுள்ளார்.
திறந்த கூட்டுப் பங்காண்மை அமைப்பு 2011ம் ஆண்டில் சர்வதேச மட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதில் இணைந்து கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பின்படி இலங்கையும் 2015ம் ஆண்டில் இதில் இணைந்து கொண்டது. இந்த அமைப்பில் அங்கத்துவம் பெற்றுள்ள முதலாவது தெற்காசிய நாடு இலங்கையாகும். இதுவரை உலகில் 75 நாடுகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment