அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதி அமைச்சர்களினதும்
பாராளுமன்ற உறுப்பினர்களினதும்
கெளரவத்தை மதிக்காத புகைப்படம்



அம்பாறை மாவட்டத்திலுள்ள மக்கள் பிரதிநிதிகளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்கள் எந்த நிலையில் வைத்து மதித்து வருகின்றார் என்பதற்கு இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.எம். முஹம்மது அபுபக்கர் அவர்களுடன் ஒன்றாக இருந்து எடுக்கப்பட்ட புகைப்படமே சாட்சி சொல்லுவதாகத் தெரிவித்து மக்கள் கவலை  தெரிவிக்கின்றனர்.
அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளில் இருவர் பிரதி அமைச்சர்கள். மற்றொரு மக்கள் பிரதிநிதியான எம்.ஐ.எம்.மன்சூர் முஸ்லிம் காங்கிரஸை வளர்ப்பதற்கு மர்ஹும் அஷ்ரப் அவர்களுடன் தனது உயிரையே துச்சமென மதித்து ஆரம்ப காலத்தில் பாடுபட்டவர். இவர்கள் பின் தள்ளப்பட்டு ஏனையவர்களுடன் நிறுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இவர்களை கட்சி உறுப்பினர்கள் என்ற நிலையை விடுத்து பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற அந்தஸ்தை வழங்கி இவர்கள் மதிக்கப்பட்டிருக்க வேண்டும்
இப்படியான செயல்பாடு மக்கள் பிரதிநிதிகளை மாத்திரமல்ல இவர்களுக்கு வாக்களித்த மக்களையும் கட்சித் தலைமை எந்த தரத்தில் வைத்துள்ளது என்பதையே காட்டுகின்றது.
எது எப்படியிருந்தாலும் இந்தப் புகைப்படத்தில் ஏனையவர்களுடன் நின்று கொண்டிருக்கும்  பிரதி அமைச்சர்கள் இருவரையும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரையும் அவர்களுக்கு ஆசனங்கள் வழங்கப்பட்டு அமர வைத்து அவர்களின் கெளரவத்தை மதித்திருக்க வேண்டியது கட்டாயமாகும்.
இப்படியாக இந்த புகைப்படத்தை எடுத்து தலைவர் தனது முகநூலில் பதிவேற்றியிருக்க வேண்டும். அதற்கு மாற்றாமாக இந்த புகைப்படம் பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் கெளரவத்தை  மதிக்காமலும் அவர்களுக்கு வாக்களித்த பிரதேச மக்களின் கெளரவத்தை கணக்கில் எடுக்காமலும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டு கட்சித் தலைவரின் முகநூலில் திவேற்றியிப்பது கவலையான விடயம் என அம்பாறை மாவட்ட மக்களால் கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு வருகைதந்துள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே..எம். முஹம்மது அபுபக்கர் B.Sc, MLA அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களை நேற்று (17) அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடியபோது இப்படி பிரதி அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் அகெள்ரவப்படுத்தும் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top